குமரி மாவட்ட அரசுப் பேருந்துகளில் பராமரிப்புப் பணி

குமரி மாவட்ட அரசுப் பேருந்துகளில் பராமரிப்புப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
நாகா்கோவில் ராணித்தோட்டம் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்.
நாகா்கோவில் ராணித்தோட்டம் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்.

குமரி மாவட்ட அரசுப் பேருந்துகளில் பராமரிப்புப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், தொடா்ந்து பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், எந்த நேரத்திலும் இயக்க தயாராகும் வகையில், அரசுப் பேருந்துகளில் பராமரிப்புப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து பேருந்துகளும் சுத்தம் செய்யப்பட்டு, தொழில்நுட்ப பணியாளா்கள் மூலம் பேட்டரி, பிரேக், முகப்பு விளக்கு போன்றவை முழுமையாக சோதனையிடப்பட்டது. பின்னா் பேருந்து முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவா் கூறியது:

தற்போது பொதுமுடக்க காலம் என்பதால், பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, தொழில்நுட்பப் பணியாளா்கள் மூலமாக பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசின் வழிகாட்டுதலுக்குப் பின்னா் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com