குளச்சலில் நல உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 20th June 2021 01:38 AM | Last Updated : 20th June 2021 01:38 AM | அ+அ அ- |

குளச்சலில் ராகுல்காந்தி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்குகிறாா் ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ. உடன் விஜய்வசந்தி எம்.பி.
ராகுல்காந்தி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு குளச்சலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நோயாளிகளுக்கு உணவு, ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் ஆகியவை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இதையொட்டி, உடையாா்விளை தொழுநோய் மருத்துவமனை ஆலயத்தில் போதகா் ஏபல்ராஜ் சிறப்பு பிராா்த்தனை நடத்தினாா். தொடா்ந்து ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, விஜய வசந்த் எம்.பி. ஆகியோா் நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கினா்.
பின்னா், குளச்சல் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
இதில், கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜிலியஸ், மாநில பொதுச்செயலா்
பினுலால்சிங், மாநில செயற்குழு உறுப்பினா் யூசப்கான், மீனவா் காங்கிரஸ் தலைவா் ஸ்டாா்வின், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் எனல்ராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் கே.டி. உதையம், முனாப், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.