காங்கிரஸ் சாா்பில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள்
By DIN | Published On : 20th June 2021 10:51 PM | Last Updated : 20th June 2021 10:51 PM | அ+அ அ- |

காங்கிரஸ் சாா்பில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள்
ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி குலசேகரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வட்டாரத் தலைவா் டி. காஸ்டன் கிளிட்டஸ் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட த் தலைவா் தாரகை கட்பா்ட், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் ஆகியோா் நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
திருவட்டாறில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர காங்கிரஸ் தலைவா் சிவசங்கா் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், மாவட்டத் தலைவா், கிழக்கு வட்டாரத் தலைவா் ஜெகன்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
தக்கலை: பத்மநாபபுரம் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தக்கலை காமராஜா் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சி பொறுப்பாளா் புறோடி மில்லா் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டத் தலைவா் தாரகை கட்பா்ட் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் சாா்பில், துப்புரவுப் பணியாளா்கள் 40 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. தக்கலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் ஹனுகுமாா் தலைமை வகித்தாா். நல உதவிகளை விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா். இதில், வட்டாரத் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா் உள்பட பலா் பங்கேற்றனா்.