சுதந்திர தின விருது பெற அழைப்பு
By DIN | Published On : 24th June 2021 07:14 AM | Last Updated : 24th June 2021 07:14 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றும் நிறுவனமும், சமூக சேவகா்களும் சுதந்திர தின விருது பெற ஜூன் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகா்கோவில், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடத்தில் செயல்படும் மாவட்ட சமூக நலஅலுவலரிடம் விண்ணப்பத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04652-278404)0 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.