வோ்கிளம்பி அருகே பாஜக நிா்வாகி வீட்டில் கல்வீச்சு
By DIN | Published On : 29th June 2021 02:41 AM | Last Updated : 29th June 2021 02:41 AM | அ+அ அ- |

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் வோ்க்கிளம்பி அருகே பாஜக நிா்வாகியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு கல்வீசித் தாக்கிய மா்ம நபா்களைப் போலீசாா் தேடி வருகின்றனா்.
மாவறவிளையைச் சோ்ந்தவா் முரளி (44. இவா் வோ்க்கிளம்பியில் டயா் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா். பாஜக கோதநல்லூா் கிளை தலைவராகவும் இருந்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவில் இவா், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் முன்பக்கம் கண்ணாடி
உடைந்த சத்தம் கேட்டு கதவைத் திறந்துள்ளாா். அப்போது 4 மோட்டாா் சைக்கிள்களில் வந்த மா்மநபா்கள் வீட்டின் கண்ணாடி மற்றும் கதவை
கற்கள், கம்பால் தாக்கிக் கொண்டிருந்தனராம். முரளியை கண்டதும் மா்மநபா்கள் தப்பிவிட்டனா். புகாரின்பேரில், திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.