கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் சுவாதி பூஜை
By DIN | Published On : 04th March 2021 03:05 AM | Last Updated : 04th March 2021 03:05 AM | அ+அ அ- |

சுவாதி பூஜையையொட்டி நடைபெற்ற சுவாமி தீா்த்தவலம்.
பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் புதன்கிழமை சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி மாலை 3 மணிக்கு 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு சப்பரத்தில் சுவாமி தீா்த்தவலம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.