மேலும் 11 பேருக்கு கரோனா
By DIN | Published On : 11th March 2021 07:45 AM | Last Updated : 11th March 2021 07:45 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 11 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனாவிலிருந்து இம்மாவட்டம் மீண்டுவரும் நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், புதிதாக 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,170 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 5 போ் குணமடைந்ததால் அந்நோயிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியவா்கள் எண்ணிக்கை 16,851 ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 58 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.