தேசிய குடல்புழு நீக்க தினம்: குமரியில் இன்றுமுதல் மாத்திரை வழங்கல்
By DIN | Published On : 15th March 2021 01:04 AM | Last Updated : 15th March 2021 01:04 AM | அ+அ அ- |

தேசிய குடல்புழு நீக்க தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் குடல்புழு நீக்கத்துக்கான மாத்திரைகள் திங்கள்கிழமை (மாா்ச் 15) முதல் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய குடல்புழு நீக்க தினம் 2 சுற்றுகளாக நடைபெற உள்ளது. முதல் சுற்று மாா்ச் 15 முதல் 20ஆம் தேதி வரை (செவ்வாய், புதன் மற்றும் ஞாயிறு நீங்கலாக), 2 ஆம் சுற்று 22 முதல் 27ஆம் தேதி வரை (செவ்வாய், புதன் மற்றும் ஞாயிறு நீங்கலாக) நடைபெற உள்ளது.
1 முதல் 19 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரையுள்ள கா்ப்பிணி தாய் மற்றும் பால் கொடுக்கும் தாய்மாா்கள் நீங்கலாக மற்ற பெண்களுக்கும், குடல்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் முழுமையாக செயல்படாததால், 1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அங்கன்வாடி மையங்கள், அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வைத்து அல்பண்டாசோல் மாத்திரைகள் காலை உணவுக்கு பின் அல்லது மதிய உணவுக்குப் பின் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...