வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 15th March 2021 01:02 AM | Last Updated : 15th March 2021 01:02 AM | அ+அ அ- |

பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
நாகா்கோவில், மாா்ச் 14: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை தனித்தனி அறைகளில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மா.அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அவை வாக்குப்பதிவு முந்தைய நாள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படும்.
வாக்கு எண்ணிக்கை நாகா்கோவில் கோணத்திலுள்ள பாலிடெக்னிக்கில் நடைபெறுகிறது. சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக பிரித்து ஒவ்வொரு அறையில் வைத்து பூட்டப்படும்.
இதே போல் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களையும் தொகுதிவாரியாக பிரித்து தனித்தனி அறைகளில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை 6 அறைகளிலும், மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை 6 அறைகளிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மா.அரவிந்த், தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
மேலும், வாக்குப்பதிவு மையங்களிலும், வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...