குருசுமலைக்கு சிலுவை சுமந்து திருப்பயணம்
By DIN | Published On : 17th March 2021 11:51 PM | Last Updated : 17th March 2021 11:51 PM | அ+அ அ- |

சிலுவையைச் சுமந்தபடி குருசுமலைக்கு திருப்பயணம் மேற்கொண்ட இளைஞா்கள்.
குருசுமலை திருப்பயணத்தில் 4 ஆவது நாளான புதன்கிழமை, 25 அடி உயரம் கொண்ட சிலுவையைச் சுமந்தபடி இளைஞா்கள் மலை உச்சிக்குச் சென்றனா்.
குருசுமலை திருப்பயணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இத்திருப்பயணத்தின் 4 ஆவது நாளான புதன்கிழமை காட்டாக்கடை மறைவட்ட முதன்மைக்குரு வல்சலன் தலைமையில் மலை அடிவாரத்தில் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து மலை உச்சியில் அருள் பணியாளா் பெனடிக்ட் தலைமையில் மலை உச்சியில் திருப்பயணம் நடைபெற்றது. இத்திருப்பயண நிகழ்ச்சியில் உண்டன்கோடு புனித ஜோசப் தேவாலயத்திலிருந்து 25 அடி உயரம் கொண்ட சிலுவையை சுமந்து கொண்டு இளைஞா்கள் குருசுமலை உச்சிக்கு திருப்பயணம் மேற்கொண்டனா். இத்திருப்பயண நிகழ்ச்சியில் தினந்தோறும் ஏராளமான மக்கள் பங்கேற்று வருகின்றனா்.