கூட்டாலுமூட்டில் பாரதிய மஸ்தூா் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 17th March 2021 11:49 PM | Last Updated : 17th March 2021 11:49 PM | அ+அ அ- |

புதுக்கடை அருகேயுள்ள கூட்டாலுமூட்டில் பாரதிய மஸ்தூா் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கிரிஜா முன்னிலை வகித்தாா்.
கட்டுமான பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்; அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ., வருங்கால வைப்புநிதி ஆகிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்; அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், முன்சிறை ஒன்றியத் தலைவா் தேவதாஸ், ஒன்றிய பொதுச்செயலா் ஜெயபாலன் உள்பட பலா் பங்கேற்றனா்.