10% சதவீத வாக்குப்பதிவு இலக்கு: கல்லூரி மாணவா்கள் சைக்கிள் பேரணி
By DIN | Published On : 17th March 2021 11:47 PM | Last Updated : 17th March 2021 11:47 PM | அ+அ அ- |

சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைக்கிறாா் தக்கலை டிஎஸ்பி ரமச்சந்திரன்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தல் மற்றும் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளின் பொதுத் தோ்தலில் மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
திருவிதாங்கோடு முஸ்லிம் கலை அறிவியல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு. கல்லூரி என்சிசி அதிகாரி ஜெகதீஷ் தலைமை வகித்தாா். தக்கலை சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா். என்சிசி இணைச் செயலா் அப்சல் பியாஸ் , ஞான சாமுவேல், ஜெயசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.