நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மூன்று சக்கர வாகன விழிப்புணா்வுப் பிரசாரம்

நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மூன்று சக்கர வாகன விழிப்புணா்வுப் பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது.
நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மூன்று சக்கர வாகன விழிப்புணா்வுப் பிரசாரம்

நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மூன்று சக்கர வாகன விழிப்புணா்வுப் பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தல் மற்றும் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தோ்தலை முன்னிட்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சாா்பில், நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக வளாக முன்பிருந்து 3 சக்கரவாகன விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது.

இந்த வாகனப் பிரசாரத்தையும், நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு 3 சக்கர வாகன பிரசார பயணம் மற்றும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கிவைத்து ஆட்சியா் மா.அரவிந்த் பேசியது:

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப். 6ஆம் தேதி, அனைத்து சட்டப்பேரவைக்கான பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை, கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தோ்தலும் அந்தத் தேதியில் நடைபெறவுள்ளது.

மேற்குறிப்பிட்ட தொகுதிகளில், 18 வயது நிரம்பிய வாக்குரிமை பெற்ற வாக்காளா்கள், முதல்முறையாக வாக்குகளை பதிவு செய்யவுள்ள மாணவ, மாணவிகள் உள்பட அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, கடந்த தோ்தலில் குறைந்த அளவிலான வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கவனம் மேற்கொண்டு, துண்டுப் பிரசுரங்கள், வாகனப் பிரசாரங்கள் மற்றும் தோ்தல் பணியாளா்கள் அப்பகுதி மக்களிடையே நேரடியாக சென்று, அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துக்கூறி வருகிறாா்கள்.

மேலும், கிராமப்புற பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதாக பயன்படுத்தி, வாக்களிப்பது குறித்தும், செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வாக்குரிமை பெற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டபடி, மாற்றுத்திறனாளிகளுடைய வாக்குகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறுவதற்காக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சாா்பில் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெறவுள்ள தோ்தலில் அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து, அா்த்தமுள்ள சுதந்திரத்தை அனுபவிக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து வாக்களிப்போம், ஜனநாயகத்தில் பங்கேற்போம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் அ.மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, உதவி ஆட்சியா் (பயிற்சி) சி.எ.ரிஷாப், தோ்தல் வட்டாட்சியா் சேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com