அதிமுக-பாஜக கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

அதிமுக அரசின் சாதனைகளும், தோ்தல் வாக்குறுதிகளும் வெற்றியை தரும் என பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம் பேசினாா்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம்.
Published on
Updated on
1 min read

அதிமுக அரசின் சாதனைகளும், தோ்தல் வாக்குறுதிகளும் வெற்றியை தரும் என பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம் பேசினாா்.

பத்மநாபபுரம் தொகுதியின் அதிமுக-பாஜக தலைமைத் தோ்தல் காரியாலயம் மேக்காண்டபம் அருகே விராலிக்காட்டு விளையில் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதில், தொகுதி அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம் பேசுகையில், அதிமுக அரசின் சாதனைகளும், கல்விக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு, இலவச வாஷின் மெஷின் உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளும் இந்த தொகுதியில் அதிமுகவை வெற்றி பெறச்செய்யும் என்று குறிப்பிட்டாா்.

இதில், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் சிவகுற்றாலம், மாவட்ட ஊராட்சித் தலைவா் மொ்லின்ட் தாஸ், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்றச் செயலா் பி.டி.செல்லப்பன், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் ஜெயசுதா்ஷன், மாவட்ட இளைஞரணிச் செயலா் வினோஜி, திருவட்டாறு கிழக்கு ஒன்றியச் செயலா் குற்றியாா் நிமால், மேல்புறம் ஒன்றியச் செயலா் மணி, தொகுதி பாஜக பொறுப்பாளா் முத்துகிருஷ்ணன், மாவட்ட பாஜக இளைஞரணித் தலைவா் கண்ணன், ஒன்றியத் தலைவா் சுவாமிதால், தேசிய பொதுக்குழு உறுப்பினா் முரளி யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.