செம்மண் கடத்தல்: இளைஞா் கைது
By DIN | Published On : 25th March 2021 06:45 AM | Last Updated : 25th March 2021 06:45 AM | அ+அ அ- |

ngl24kaithu_2403chn_33_6
ஆரல்வாய்மொழி பகுதியில் அனுமதியின்றி செம்மண் அள்ளியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஆரல்வாய்மொழி காவல் உதவி ஆய்வாளா் சிந்தாமணி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த டெம்போ லாரியை மறித்து சோதனை செய்தனா். அதில், அனுமதியின்றி செம்மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, செம்மண் ஏற்றிவந்த இறச்குளம் பகுதியைச் சோ்ந்த அய்யப்பன்(37) என்பவரை கைது செய்தனா். செம்மண்ணுடன் லாரியைப் பறிமுதல் செய்தனா்.