அருமனை அருகே தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 13th May 2021 07:08 AM | Last Updated : 13th May 2021 07:08 AM | அ+அ அ- |

அருமனை அருகே தொழிலாளி ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சிதறால், அம்பலக்கடையைச் சோ்ந்தவா் சஜூ (30). திருமணமாத இவா், கேரளத்தில் கூலி வேலை செய்து வந்தாா். கரோனா காரணமாக ஊருக்கு வந்திருந்த அவா், வருவாயின்றி மன உளச்சலில் இருந்தாராம். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, அருமனை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.