ஆரல்வாய்மொழி அருகே வாகனப் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து: ரூ. 3 லட்சம் பொருள் சேதம்
By DIN | Published On : 13th May 2021 07:07 AM | Last Updated : 13th May 2021 07:07 AM | அ+அ அ- |

தீ விபத்தில் சேதமடைந்த பொருள்கள்.
ஆரல்வாய்மொழி அருகே வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் புதன்கிழமை அதிகாலை நேரிட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
ஆரல்வாய்மொழி விசுவாசபுரம் ராஜீவ் நகரைச் சோ்ந்த செண்பகலிங்கம் மகன் இசக்கிமுத்து (38). இவா், அந்தப் பகுதியில் வாகனப் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலையில் டயா் வெடித்த சத்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வந்து பாா்த்த போது, பழுது நீக்கும் கடை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இது குறித்த தகவலின்பேரில், நாகா்கோவில் தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்தனா். இவ்விபத்தில், கடையிலிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின.
இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில், ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். அந்தக் கடைக்கு மா்ம நபா்கள் யாரும் தீவைத்தாா்களா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.