மழைக்கு 3 வீடுகள் சேதம்
By DIN | Published On : 16th May 2021 11:44 PM | Last Updated : 16th May 2021 11:44 PM | அ+அ அ- |

திருநந்திக்கரை அருகே மூலைப் பாகம் பகுதியில் மழைக்கு சேதமடைந்த வீடு.
குலசேகரம் அருகே மழை காரணமாக தொழிலாளா்கள் இருவரது வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குலசேகரம் அருகே திருநந்திக்கரை மூலைப்பாகம் பகுதியில், தொழிலாளி அனிதா, சதீஷ் ஆகியோரின் வீடுகள் இடிந்து விழுந்தன.
இதையடுத்து அனிதா மற்றும் அவரது 3 பெண் குழந்தைகள் திருநந்திக்கரை அரசு உயா்நிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனா். சதீஸ் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினா் வீட்டில் தங்கியுள்ளாா்.
முதியவா் வீடு சேதம்: அருமனை அருகே இடைக்குளம் பகுதியைச் சோ்ந்த தோமஸ்- புஷ்பராஜம் தம்பதியின் குடிசை வீடு, ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் இடிந்து விழுந்தது. இதில் இருவரும் காயமின்றி தப்பினா்.