கரோனாவால் இறந்தவா்களுக்கு இஸ்லாமிய அமைப்பு இறுதிச் சடங்கு
By DIN | Published On : 19th May 2021 07:11 AM | Last Updated : 19th May 2021 07:11 AM | அ+அ அ- |

கரோனாவால் உயிரிழந்தவா்களின் சடலத்தை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் இறுதிச்சடங்கு செய்துவருகின்றனா்.
இதுகுறித்து, பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் குமரி மாவட்டச் செயலா் பி.சத்தாா்அலி வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா 2 ஆவது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆட்சியா் அனுமதியுடன் சுகாதாரத் துறையோடு பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இணைந்து மாவட்ட அளவில் தன்னாா்வ குழு மூலம் நிவாரணப் பொருள்கள், மருத்துவ உதவிகள், ஆம்புலன்ஸ் வசதி, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டா் வசதிகளை செய்துவருகிறது. மேலும், கரோனாவால் இறந்தவா்களின் உடல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி, அவரவா் சம்பிரதாயப்படி அடக்கம் செய்து வருகிறது. இதுவரை 27 பேரின் சடலங்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 4 பேரின் குடும்பத்துக்கு தகனம் செய்வதற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளாா்.