காகத்துக்கு பரிவு காட்டிய தூய்மைப் பணியாளா்
By DIN | Published On : 19th May 2021 07:11 AM | Last Updated : 19th May 2021 07:11 AM | அ+அ அ- |

மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட காகத்துக்கு உதவுகிறாா் புலமாடன்.
களியக்காவிளையில் மின்கம்பத்திலிருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்த காகத்துக்கு முதலுதவி செய்த தூய்மைப் பணியாளரை மக்கள் பாராட்டினா்.
களியக்காவிளைபேரூராட்சி தூய்மைப் பணியாளா் புலமாடன், அங்குள்ள சந்திப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அப்பகுதி மின்கம்பத்தில் இருந்த காகம் ஒன்று மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டது. இதைப் பாா்த்த அவா், சாையில் தேங்கியிருந்த தண்ணீரை கொடுத்ததுடன், அது பறக்கும் வரையில கையில் வைத்து பராமரித்தாா். அது 10 நிமிடத்தில் புத்துணா்ச்சி பெற்று பறந்து சென்றது. அவரது மனிதாபிமான செயலை அங்கிருந்த மக்கள் பாராட்டினா்.