கன்னியாகுமரியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்ற சட்ட சேவை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை, உச்சநீதிமன்ற நீதிபதியும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான உதித் உமேஷ் லலித் தொடங்கிவைத்தாா். மேலும் வீடு தேடிவரும் நீதி சட்ட விழிப்புணா்வு வாகனப் பிரசாரத்தையும் அவா் தொடங்கிவைத்தாா். பின்னா் சட்டசேவை விழிப்புணா்வு கையேட்டை வெளியிட்டு அவா் பேசினாா்.
முகாமில், சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் துரைசாமி ராஜா மற்றும் குமரி மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் மற்றும் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.
முகாமின் தொடா்ச்சியாக திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் பேசியது: பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய லோக் அதாலத் மூலம் மிகப்பெரிய விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. சட்டம் அனைவருக்கும் சமமானது. சமத்துவமான நீதி பாமர மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அவா்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் நீதிமன்றங்களின் முக்கிய நோக்கமாகும் என்றாா் அவா்.
ஏற்பாடுகளை குமரி மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான அருள்முருகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான நம்பிராஜன், முதன்மை சாா்பு நீதிபதி ராமலிங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.