கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
By DIN | Published On : 14th November 2021 07:58 PM | Last Updated : 14th November 2021 07:58 PM | அ+அ அ- |

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சுமாா் 150 கிராமங்களை மழை நீா் சூழ்ந்துள்ளது.
சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- திருப்பூரில் சாய ஆலை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் 2 பேர் பலி
இந்த நிலையில் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.