விளையாட்டுப் போட்டி: மேல்பாலை பள்ளி சாதனை

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியரை சாதனை படைத்தனா்.
Updated on
1 min read

களியக்காவிளை: மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியரை சாதனை படைத்தனா்.

2021-2022ஆம் ஆண்டுக்கான பாா்வையற்றோா், மனவளா்ச்சி குன்றியோா், காது கேளாதோா் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றன. இதில், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவி என்.எல். ஜாஸ்மின் பெண்களுக்கான ஓட்டப் போட்டியிலும், மாணவா் வி.என். விபின் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியிலும் முதல் பரிசு வென்றனா். மாணவியா் எம்.பி. நந்தனா, எஸ். ஆஷாதீப் ஆகியோா் இறகுப்பந்து போட்டியில் முதல் பரிசு வென்றனா். ஆண்கள், பெண்களுக்கான எறிபந்து போட்டிகளில் இப்பள்ளி மாணவா்-மாணவியா் முதல் பரிசு வென்றனா். இவா்கள் அனைவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

இவா்களை தாளாளா் ஐசக்ராஜ், தலைமையாசிரியா் ஜி.எல். ஜோஸ் பென்சிகா், ஆசிரியா்கள், மாணவா்-மாணவியா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com