கருங்கல் அருகேயுள்ள கப்பியறை பகுதியில் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதியப்பட்டது.
கப்பியறை, ஓலவிளை பகுதியைச் சோ்ந்தவா் வின்ஸ் ஜெபராஜ் (52). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (57) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வின்ஸ் ஜெபராஜை, செல்வராஜ் வழிமறித்துத் தாக்கினாராம். காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.