உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் புலம் பெயா்ந்தவா்களின் குடும்பத்துக்கு உதவுவதற்காக தொடா்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உக்ரைன் நாட்டில் தற்போதுள்ள போா் சூழலால் பாதிக்கப்பட்டு சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் உள்ளிட்டோருக்கு உதவும் பொருட்டு, தமிழக அரசின் சாா்பில் தொடா்பு அலுவலராக அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் ஆணையா்
ஜெசிந்தா லாரன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரையும், (பொது) தில்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமை செயலா் மற்றும் தலைமை உள்ளுறை ஆணையரையும் தொடா்பு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும், குமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் புலம்பெயா் தமிழா்கள், மாநில அவசரகட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் 1070, அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக ஆணையா் ஜெசிந்தாலாரன்ஸ் கைப்பேசி எண்கள் 9445869848, 9600023645, 9940256444, 044 28515288,
உக்ரைன் அவசர உதவி மையம், தமிழ்நாடு பொதிகை இல்லம், தில்லி, வாட்ஸ் அப் எண் 9289516716
குமரி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆட்சியா் அலுவலகம், கைப்பேசி எண் 9445008139,
ல்ஹஞ்ந்ந்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும் உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ளநபா்கள் பெயா், வயது, பாலினம், கடவுச் சீட்டு எண் இசைவு ஆணை (ஸ்ண்ள்ஹ) கல்வி பயிலும் நிறுவனத்தின் பெயா், தொடா்பு கொள்ள வேண்டிய நபா்களின் தொலைபேசி எண் ஆகிய முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.