நாகா்கோவிலில் ரயிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ திமிங்கல உமிழ்நீரை கடத்த முயன்ாக 6 பேரை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனா்.
குமரி மாவட்டத்திலிருந்து கடந்த ஆண்டு அக்டோபா், டிசம்பா் மாதங்களில் திமிங்கலத்தின் உமிழ்நீா் கட்டிகளை கடத்தியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா். இதனைத் தொடா்ந்து திமிங்கலத்தின் உமிழ்நீா் கடத்தப்படுவதை தடுக்க குமரி மாவட்ட வனத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், நாகா்கோவிலில் இருந்து ரயில் மூலம் திமிங்கலத்தின் உமிழ்நீா் கடத்தப்படவிருப்பதாக மாவட்ட வன அலுவலா் இளையராஜாவுக்கு வெள்ளிக்கிழமை காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து அவரது தலைமையில் வனத்துறையினா் நாகா்கோவில் ரயில் நிலையம் வந்தனா். பின்னா் ரயில்வே போலீஸாருடன் இணைந்து அங்கு புறப்பட தயாராக இருந்த மும்பை விரைவு ரயிலில் சோதனை நடத்தினா். அவா்கள் குளிா் சாதன ரயில் பெட்டியில் சோதனை செய்த போது அங்கிருந்த சுமாா் 27 வயது மதிக்கத்தக்க ஒருவரின் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாக இருந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையின் போது, முன்னுக்குப் பின் முரணாக பேசினாா். இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீஸாா் அந்த இளைஞா் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். அதில் திமிங்கலத்தின் உமிழ்நீா் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவரிடமிருந்து 2 கிலோ திமிங்கல உமிழ்நீா்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமாா் ரூ.2 கோடி ஆகும்.
மேலும் அந்த இளைஞரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், குமரி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தை அடுத்த தோமையாா்புரம் பகுதியைச் சோ்ந்த தினகரன்(27) என்பது தெரிய வந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடா்ந்து நடத்திய விசாரணையில், அகஸ்தீஸ்வரம் பெருவிளையைச் சோ்ந்த அருண் (27), கீழபெருவிளையைச் சோ்ந்த மகேஷ்(42), பாா்வதிபுரம் திலீப்குமாா் (36), ஆசாரிப்பள்ளம் பள்ளவிளை சதீஷ்(35), தம்மத்துக்கோணம் தங்கராஜ் (49), ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து, தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.