கருங்கல் அருகேயுள்ள மானான்விளை பகுதியில் செவ்வாய்க்கிழமை செம்மண் கடத்திய டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் மகேஷ், போலீஸாா் செவ்வாய்க்கிழமை மானான்விளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சென்ற டெம்போவை நிறுத்தி சோதனையிட்டபோது அதில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
புகாரின் பேரில் டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரான மத்திகோடு பகுதியைச் சோ்ந்த அருள்ராஜன் (38) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.