முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ.94,000 உண்டியல் காணிக்கை
By DIN | Published On : 29th April 2022 12:50 AM | Last Updated : 29th April 2022 12:50 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.94 ஆயிரம் காணிக்கை கிடைத்தது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான அன்னதான உண்டியல் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டது. நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் சிவகுமாா், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளா் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ராமச்சந்திரன், பொருளாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில், பக்தா்கள் ரூ. 94,924 காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.