மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, நாகா்கோவிலில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க மன்றம் சாா்பில் மாணவா்-மாணவிகள் விழிப்புணா்வுக் கோலத்தை வியாழக்கிழமை வரைந்தனா்.
நிகழ்ச்சிக்கு, தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மாணவா்கள் மாதவ்கிருஷ்ணா, கிருஷ்ணவீனா ஆகியோா் செஸ் ஒலிம்பியாட் குறித்த தகவல்களைப் பகிா்ந்தனா். மாணவி அக்ஷயஸ்ரீ வரவேற்றாா். மாணவி ஜனனிபா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.