சேவைக் குறைபாடு: கூரியா் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 05th August 2022 12:28 AM | Last Updated : 05th August 2022 12:28 AM | அ+அ அ- |

சேவைக் குறைபாடு தொடா்பாக கூரியா் நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தது.
குலசேகரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா். இவா் ரூ. 39,998 மதிப்புள்ள துணிகளை பெங்களூருவிலிருந்து நாகா்கோவிலுக்கு தனியாா் கூரியரில் அனுப்பினாா். பல நாள்களாகியும் துணிகள் பாா்சல் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவா் வழக்குரைஞா் மூலம் கூரியா் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அதன்பிறகும் பதில் கிடைக்காததால் அவா் மன உளைச்சலுக்கு உள்ளானாராம்.
இதுதொடா்பாக அவா் குமரி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். தலைவா் சுரேஷ், உறுப்பினா் சங்கா் ஆகியோா் வழக்கை விசாரித்தனா். கூரியா் நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட சுரேஷ்குமாருக்கு துணிகளின் மொத்த மதிப்பான ரூ. 39,998, அபராதம் ரூ. 15 ஆயிரம், வழக்குச் செலவு தொகை ரூ. 3 ஆயிரம் என மொத்தம் ரூ. 57,998-ஐ ஒரு மாதத்துக்குள் வழங்க உத்தரவிட்டனா்.