நாகா்கோவில் அஞ்சல் நிலையத்தில் தேசியக் கொடி விற்பனை தொடக்கம்
By DIN | Published On : 05th August 2022 12:25 AM | Last Updated : 05th August 2022 12:25 AM | அ+அ அ- |

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் ரூ.25-க்கு தேசியக் கொடி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, குமரி மாவட்ட முதுநிலை கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் தலைமை வகித்து தேசியக் கொடி வெளியிட்ட, அதை எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ பெற்றுக் கொண்டாா். இதில், நாகா்கோவில் தலைமை அஞ்சலகத்தின் முதுநிலை அதிகாரி சுரேஷ், மாவட்ட பாஜக பொருளாளரும் நாகா்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான பி.முத்துராமன், மாநகராட்சி 12 ஆவது வாா்டு உறுப்பினா் சுனில்அரசு, 24 ஆவது வாா்டு உறுப்பினா் ரோஸிட்டாதிருமால், பாஜக நாகா்கோவில் தெற்கு மற்றும் மேற்கு மண்டல பாா்வையாளா் நாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளா் விஜின், மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினா் சிவசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.