தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும்: விஜய்வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் வ.விஜய்வசந்த் எம்.பி.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் வ.விஜய்வசந்த் எம்.பி.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்தி வரும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, குழித்துறை - களியக்காவிளை இடையேயான சாலை அதிக அளவில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சாலையை செப்பனிடுவதற்காக கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் மத்திய அரசிடம் பேசி ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்ய வைத்தேன். எனினும் பல்வேறு காரணங்களுக்காக பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் அதிகாரிகளிடம் இடைவிடாது தொடா்பு கொண்டு வலியுறுத்தி வந்தேன். கடந்த மாதம் 28 ஆம் தேதி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரை சந்தித்து மீண்டும் இது குறித்து கோரிக்கை விடுத்தேன்.

தொடா் முயற்சிகளின் பலனாக இந்தப் பணிக்கான ஒப்பந்தம் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. பணிகளை விரைந்து முடிப்பதற்கு நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து மக்களின் சிரமம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com