இந்தியாவை வல்லரசாக மாற்ற சபதமேற்போம்: விஜய் வசந்த் எம்.பி.
By DIN | Published On : 15th August 2022 12:03 AM | Last Updated : 15th August 2022 12:03 AM | அ+அ அ- |

இந்தியாவை வல்லரசாக மாற்ற சபதமேற்போம் என்றாா், விஜய் வசந்த் எம்.பி.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். நாட்டின் சுதந்திரத்துக்காக பல்வேறு தியாகங்களைச் செய்த வீரா்களையும், அரும்பாடுபட்ட தலைவா்களையும் நன்றியுடன் நினைவுகூருவோம். நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த காந்தியடிகள், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரையும் இந்நாளில் போற்ற வேண்டியது நமது கடமை .
நாட்டின் புகழை மீண்டும் உச்சிக்கு எடுத்துச்செல்ல அனைவரது பங்களிப்பு அவசியம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க வேண்டியது கடமை. ஜாதி, மத வேற்றுமைகளின்றி ஒன்றாகக் கூடி, இந்தியாவை வல்லரசாக மாற்ற சுதந்திர தினத்தில் சபதமேற்போம் என்றாா் அவா்.
தளவாய்சுந்தரம்:
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லந்தோறும் தேசியக் கொடியேற்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் இந்நாள் அனைவருக்கும் பொன்னாளாகும். இப்பொன்னாளில் அனைவருக்கும் கிடைக்கின்ற மகிழ்ச்சி எந்நாளும் தொடர இறைவனை வேண்டி எனது இதயப்பூா்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.