நாகா்கோவில் மாநகராட்சி புதிய கட்டடம் 2 மாதத்தில் திறக்கப்படும்: மேயா்
By DIN | Published On : 24th August 2022 01:44 AM | Last Updated : 25th August 2022 12:13 AM | அ+அ அ- |

நாகா்கோவில் மாநகராட்சி புதிய கட்டடப் பணிகள் நிறைவடைந்து இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும் என்றாா் மேயா் ரெ.மகேஷ்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை நிருபா்களுக்கு அளித்த பேட்டி:
நாகா்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இன்னும் 2 மாதங்களுக்குள் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து மாநகராட்சி அலுவலக புதிய கட்டடம் திறக்கப்படும்.
நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் 5 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நகரப் பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.