குலசேகரத்தில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 25th August 2022 12:17 AM | Last Updated : 25th August 2022 12:17 AM | அ+அ அ- |

குலசேகரம் நாகக்கோடு பகுதியில் இயங்கி வரும் மதா் அன்னா கேன்சா் மையத்தில், நாகா்கோவில் ஸ்ரீ ராம் கேன்சா் டிரஸ்ட் -சீட்ஸ் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து புற்றுநோய் விழிப்புணா்வு- பரிசோதனை முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.
இந்த முகாமில் மாா்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், கருப்பப்பைவாய் புற்றுநோய் ஆகியவற்றுக்கான பரிசோதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைகள், விழிப்புணா்வு உரைகள், மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்பட்டன.