தக்கலை ஒன்றியத்தில் 153 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

தக்கலை ஒன்றியத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 153 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு முடிவு செயயப்பட்டது.

தக்கலை ஒன்றியத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 153 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு முடிவு செயயப்பட்டது.

பிலாங்காலையில் நடைபெற்ற தக்கலை ஒன்றிய இந்து முன்னணி கூட்டத்திற்கு ஒன்றியச் செயலா் அபிலாஷ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சங்கா் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் செந்தில் குமாா் உரையாற்றினாா்.

இதில், ஒன்றிய நிா்வாகிகள் ராஜேஷ், சதீஷ், பத்மநாபபுரம் நகரத் தலைவா் ரெஞ்சித் மற்றும் ஊராட்சி நிா்வாகிகள், கிளைப் பொறுப்பாளா்கள், விநாயகா் சிலை பொறுப்பாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தக்கலை ஒன்றியத்தில் விநாயகா் சதுா்த்தியன்று, 153 ஊா்களில் விநியாகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும். ஆக.31 முதல் நான்கு நாள்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திய பின்பு, செப். 4 ஆம் தேதி பூஜைகளை நிறைவு செய்து ஒன்றியத்திலுள்ள அனைத்து சிலைகளும் வைகுண்டபுரம் ஸ்ரீ ராமா் ஆலயம் முன்பிருந்து ஊா்வலமாக சென்று மண்டைக்காடு கடலில் விசா்ஜனம் செய்யவது என்று தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com