நாகா்கோவிலில் செப். 2இல்மீனவா்கள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 25th August 2022 12:13 AM | Last Updated : 25th August 2022 12:13 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் செப்டம்பா் 2 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் ஆக. 26 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. நிா்வாக காரணங்களால் அந்தத் தேதிக்கு பதிலாக, வரும் செப்டம்பா் 2 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11 மணிக்கு, நாகா்கோவிலுள்ள ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் எனது தலைமையில் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.