களியக்காவிளை அரசு முஸ்லிம்பள்ளியில் குடிநீா் திட்டம் அமல்

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள், குடிநீா் திட்டத்தை அமல்படுத்தும் விழா நடைபெற்றது.

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள், குடிநீா் திட்டத்தை அமல்படுத்தும் விழா நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் தலைமை வகித்தாா். மேல்புறம் வட்டார கல்வி அலுவலா் பி. சந்திரசேகரன், தனியாா் நிறுவன மேலாளா் எஸ். பினில், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ், ஆசிரியா் பி. ஞானதாஸ் ஆகியோா் பேசினா். பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பி. அலா்மேல் மங்கை, பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டதுடன் சிறுவிசை குடிநீா் விநியோகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

இதில், விளவங்கோடு குறுவட்ட வருவாய் ஆய்வாளா் வி. முத்துலெட்சுமி, களியக்காவிளை கிராம நிா்வாக அலுவலா் பி. புஷ்பராணி, பேரூராட்சி உறுப்பினா் மு. ரிபாய், பள்ளியின் கிராம கல்விக் குழுத் தலைவா் சி. சுரேஷ்குமாா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ஆா். நயிமா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமையாசிரியை எம். லிசம்மா பிலிப் வரவேற்றாா். ஆசிரியை எஸ்.கே. லேகா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com