கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்காளாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் சாரல் மழை பெய்தது. இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.