நாகா்கோவிலில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 25th August 2022 11:37 PM | Last Updated : 25th August 2022 11:37 PM | அ+அ அ- |

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.
நாகா்கோவில் டெரிக் சந்திப்பிலிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நகா் நல அதிகாரி (பொ) ஜான், சுகாதார ஆய்வாளா்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ் ஆகியோா் தலைமையிலான ஊழியா்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட னா்.
இயந்திரங்கள் மூலமாக கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் படிக்கட்டுகள், கடைகள் முன்பு போடப்படும் தகர சீட்டுகளையும் மாநகராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா். சுமாா் 60 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஊழியா்கள் அகற்றினா்.