வாக்காளா் அட்டை- ஆதாா் எண் இணைப்பு: செப். 4இல் சிறப்பு முகாம்
By DIN | Published On : 25th August 2022 12:12 AM | Last Updated : 25th August 2022 12:12 AM | அ+அ அ- |

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு வசதியாக குமரி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (செப்.4) சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலை முறைப்படுத்தும் வகையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக பொதுமக்கள் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு வசதியாக தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் செப். 4 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்ட வாக்காளா்கள் அனைவரும், தாமாக முன் வந்து தங்கள்பகுதியில் உள்ள வாக்குச் சாவடியை அணுகி வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.