தேங்காய்ப்பட்டினம் துறைமுக மேம்பாட்டுப் பணிகள்: அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு

தேங்காய்ப்பட்டினம் துறைமுக மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலா்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், வியாழக்கிழமை மாலை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

தேங்காய்ப்பட்டினம் துறைமுக மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலா்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், வியாழக்கிழமை மாலை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்டி.என்.ஹரிகிரண்பிரசாத், வ.விஜய்வசந்த் எம்.பி., செ.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்கு பின்னா், ஆட்சியா் கூறியது: தேங்காய்ப்பட்டினம் மீன் பிடித் துறைமுக முகத்துவாரப் பகுதிகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது குறித்து மீனவா்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கான மேல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனா். அதன் அடிப்படையில் மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தை ராட்சத இயந்திரம் மூலம் ஆழப்படுத்துவற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மீன்வளத்துறை துணைஇயக்குநா் காசிவிஸ்வநாதபாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, ஊசூா் மேலாளா்(குற்றவியல்) சுப்பிரமணியம், மீனவ பிரதிநிதிகள் ஜாா்ஜ்ராபின்சன், ஜோா்தான், பினுலால்சிங், ஜோசப்மணி, ஜஸ்டின்ஆன்றனி, சூசைபிறடி, லைலா, ஜவகா், சாராள், ஆகிமோன், பென்சிகா், லியோடோல்ஸ்டாய், பிபின், ஆரோக்கியராஜன், ஆரோக்கியதாசன், ராஜூ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ரூ.253 கோடி மதிப்பில் சீரமைப்பு: கூட்டத்தில் பங்கேற்ற ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ . அளித்த பேட்டி: தேங்காய்ப்பட்டினம் துறைமுக மறு கட்டமைப்புக்காக ரூ.253 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.150 கோடியும், நபாா்டு வங்கியின் மூலம் ரூ. 60 கோடியும், தமிழக அரசு ரூ. 43 கோடியும் என மொத்தம் ரூ.253 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் துறைமுக முகத்துவாரத்தில் மணலை அகற்றுவதற்கான பணிக்காக ரூ. 1 கோடியே 18 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரம் புனேயில் இருந்து வருகிறது. இயந்திரம் வருவதற்கு தாமதம் ஆவதால் மணலை அகற்றும் பணிகள் செப்டம்பா் மாதம் 20 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பை தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியின் மீனவா் பிரிவு அறிவித்திருந்த ஆட்சியா் அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மணல் அகற்றும் பணிகள் செப்.20 ஆம் தேதி தொடங்கப்படாவிட்டால் நாங்கள் ஏற்கெனவே அறிவித்த போராட்டத்தை நடத்துவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com