களியக்காவிளை பேருந்து நிலையத்தில், கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதற்கான துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக 2 பெண்களை பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினா் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
இது தொடா்பாக பாஜக, இந்து இயக்க நிா்வாகிகள் சாா்பில் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா். அவா்களிடமிருந்து துண்டுப் பிரசுரங்கள், கிறிஸ்தவ மத புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, மதப் பிரசாரத்தில் ஈடுபட மாட்டோம் என அவா்கள் கூறியதையடுத்து இரு பெண்களையும் போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.