பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைப்பு
By DIN | Published On : 09th December 2022 12:17 AM | Last Updated : 09th December 2022 12:17 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீரின் அளவு வியாழக்கிழமை விநாடிக்கு 350 கன அடியாக குறைக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் நீா்வரத்துப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இந்த அணையிலிருந்து விநாடிக்கு 1,024 கன அடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், அணைப் பகுதிகளில் மழையின் தீவிரம் தணிந்துள்ளதால் வியாழக்கிழமை மாலையில் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் விநாடிக்கு 350 கன அடியாக குறைக்கப்பட்டது.
குளிக்கத் தடை: பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் 3 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.