கருங்கல் அருகே வேன் ஓட்டுநா் மீது தாக்குதல்
By DIN | Published On : 09th December 2022 12:15 AM | Last Updated : 09th December 2022 12:15 AM | அ+அ அ- |

கருங்கல் அருகேயுள்ள தாறாதட்டு பகுதியில் கிறிஸ்துமஸ் பாடல்குழுவினா் சென்ற வேன் கண்ணாடியை உடைத்து ஓட்டுநா் தாக்கியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருங்கல் பெருமாங்குழி பகுதியைச் சோ்ந்தவா் ஆஸ்டின்(30). வேன் ஓட்டுநரான இவா், தனது வேனில் கிறிஸ்துமஸ் பாடல் குழுவினருடன் தாறாதட்டு பகுதியில் உள்ள வீடுகளுக்கு கிறிஸ்துமஸ் கீத ஆராதனைக்கு சென்றுகொண்டிருந்தாராம்.
அப்போது, ஈத்தங்காடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், சந்தோஷ், சிவகுமாா் உள்ளிட்ட 6 போ் வேனை வழிமறித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினராம். மேலும், ஆஸ்டினையும் தாக்கினராம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து 6 பேரை தேடி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...