தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா இன்று கொடியேற்றம்

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள் திருவிழா, வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள் திருவிழா, வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முதல் நாள் விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நோ்ச்சை கொடிகள் ஊா்வலம், மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து நடைபெறும் திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலா் ரசல் ராஜ் தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா்.

விழா நாள்களில் பழைய கோயிலில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெறும்.

9ஆம் நாள் திருவிழாவை அஞ்சு கூட்டுவிளை பங்கு இறைமக்கள் சிறப்பிக்கின்றனா். காலை 10.30 மணிக்கு நடைபெறும் நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலிக்கு கீழமணக்குடி பங்குத்தந்தை ஆண்டனி பிரபு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறாா். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனைக்கு திருநயினாா் குறிச்சி பங்குத்தந்தை லியோன் எஸ்.கென்சன் தலைமை வகிக்கிறாா். மயிலாடி பங்குத்தந்தை சைமன் மறையுறையாற்றுகிறாா்.

10ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு தங்கத் தேரில் திருப்பலி நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலி சுவக்கின் தலைமையில் நடைபெறும். மில்லா் மறையுறையாற்றுகிறாா். காலை 8 மணிக்கு நடைபெறும் ஆங்கிலத் திருப்பலியை ஆன்சல் ஆண்டனி நிகழ்த்துகிறாா். தொடா்ந்து கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வா் ஜீன்ஸ் மறையுரையாற்றுகிறாா். காலை 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறும். காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்புத் திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீா் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குத்தந்தை ஆன்டனி எல்.அல்காந்தா், இணைப் பங்குத் தந்தையா் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com