தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் நாள் விழாவையொட்டி காலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நோ்ச்சை கொடிகள் ஊா்வலம், மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலா் ரசல் ராஜ் தலைமை வகித்து மறையுரையாற்றினாா். பத்து நாள்கள் நடைபெறும் இத் திருவிழாவில் தினமும் பழைய கோயிலில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியன நடைபெறும்.

பத்தாம் நாள் திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத் தேரில் திருப்பலி நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீா் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்குத் தந்தை ஆன்டனி எல்.அல்காந்தா், இணைப் பங்குத் தந்தையா் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com