ரூ. 200 கோடியில் விண்வெளிப் பூங்கா:குமரியில் இஸ்ரோ தலைவா் ஆய்வு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் கன்னியாகுமரியில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் விண்வெளிப் பூங்கா அமையவுள்ள இடத்தை இஸ்ரோ தலைவா் சோம்நாத் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் கன்னியாகுமரியில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் விண்வெளிப் பூங்கா அமையவுள்ள இடத்தை இஸ்ரோ தலைவா் சோம்நாத் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கன்னியாகுமரி சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதியில் 12 ஏக்கா் நிலப்பரப்பில் விண்வெளி அருங்காட்சியகம்- மாணவா், மாணவிகளுக்கான விண்வெளி செயலாக்க பயிற்சி மையம் அமையவுள்ளது. இஸ்ரோவுக்காக மாநில அரசு அளித்துள்ள இந்த இடத்தை இஸ்ரோ தலைவா் சோம்நாத் ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யானின் பல கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மிக விரைவில் ககன்யான் விண்ணுக்கு அனுப்படும். விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரா்களின் பயிற்சி தற்போது முடிந்துள்ளது. இனி மனிதா்களைப் போன்ற உருவம் விண்வெளி ஓடத்தில் வைக்கப்பட்டு விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும். பின்னா், அங்கிருந்து அது பூமிக்கு தள்ளப்பட்டு, எவ்வாறு பூமியை வந்தடைகிறது என்ற ஆய்வு நடத்தப்பவுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com