நியாயவிலைக்கடையில் இருப்பு குறைவு: விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு
By DIN | Published On : 11th December 2022 05:43 AM | Last Updated : 11th December 2022 05:43 AM | அ+அ அ- |

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் நியாயவிலைக்கடையில் ஆய்வின்போது இருப்பு குறைவாக இருந்ததால் கடை விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
பெரியவிளை மற்றும் கோட்டாறு சவேரியாா் கோயில் பகுதியிலுள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்களின் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதில் ,பெரியவிளை பகுதியில் கலசமிறக்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக் கடையில் அரிசி, பருப்பு இருப்பு குறைவாகவும், சீனி கூடுதலாக இருந்தது. அதேபோல் கோட்டாறு சவேரியாா் கோயில் அருகிலுள்ள ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக் கடையில் அரிசி கூடுதலாகவும், பருப்பு குறைவாக இருந்தது. மேலும் பயன்படுத்த இயலாத 33 மூட்டை அரிசி இருந்தது. இதையடுத்து கடை விற்பனையாளா்கள் மீது ந டவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.