மயிலாடியில் வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு
By DIN | Published On : 11th December 2022 05:45 AM | Last Updated : 11th December 2022 05:45 AM | அ+அ அ- |

மயிலாடி ரிங்கல் தௌபே மேல்நிலைப் பள்ளியில் 12 நாள்கள் நடைபெற்ற வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ஒய்.ஆல்வின் நாயகம் தலைமை வகித்தாா். பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் ஜான் ஸ்டீபன், ஆா்.ஆஷா ஜான்சி முன்னிலை வகித்தனா். மயிலாடி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மலா்விழி வாழ்த்திப் பேசினாா்.
இதில், கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி.செல்வகுமாா் கலந்து கொண்டு, முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மேலும் பயிற்சி அளித்த பயிற்சியாளா்கள் என்.சுனேஷ், எஸ்.சுந்தா் சேகா், உதயசங்கா், சி.ஸ்டாா்லின் போ்ல், ஜாஸ்லின் அஜித், ஆா்.லினோ ரவின்ஸ், ஒய்.தங்கராஜ், பி.நியுலின் ராஜ், பி.ஜெஸ்வின் ஸ்டேன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில், கலப்பை மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் டி.பாலகிருஷ்ணன், பெற்றோா் ஆசிரியா் சங்க செயற்குழு உறுப்பினா் டி.டேவிட் மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.